திண்டுக்கல் மாவட்ட செய்தி துளிகள்

திண்டுக்கல் மாவட்ட செய்தி துளிகள்
X

பைல் படம்

ரேஷன் அரிசியை கடத்தியவர் கைது, 900 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல்

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 24 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2021-ம் ஆண்டு சரவணக்குமார்(23). என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ வழக்கின் கீழ் சரவணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு, திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், இன்று திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி, சரவணகுமாருக்கு, 24 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

காரில் ரேஷன் அரிசியை கடத்தியவர் கைது, 900 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல்:

திண்டுக்கல் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பனையராஜா, செல்வம் மற்றும் போலீசார் நாகல்நகர் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக கோவிந்தன் என்பவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது காருக்குள் 18 மூட்டைகளில் 900 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்து கோவிந்தனை கைது செய்து, 900 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்.

மோட்டார் பைக் விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:

திண்டுக்கல் மாவட்டத்தில், 60 சதவீதத்திற்குமேல் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பைக் வழங்குவதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் முகாம் வருகிற 14.09.23 மற்றும் 15.09.23 ஆகிய இரு தினங்களில் காலை 10 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது இந்த தேர்வில், 60 சதவீதத்திற்குமேல் உள்ள ஒரு கால் மற்றும் இரண்டு கால் பாதிக்கப்பட்ட மோட்டார் பைக் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் கலந்துகொண்டு பயன்பெறலாம்..

முகாமில், பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆகியவற்றுடன் நேரில் செல்ல வேண்டும்.60 சதவீதமும் அதற்கு மேலும் ஊனம் அடைந்திருக்க வேண்டும்.இடுப்புக்கு மேல் இரண்டு கைகளும், உடலும் நன்றாக செயல்பட வேண்டும்.18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!