நத்தம் நகரில் கோகுலாஷ்டமி விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மதுக்காரம்பட்டியில் நடந்த கிருஷ்ணர் ஜெயந்தி விழா
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மதுக்காரம்பட்டியில் கோகுல கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு,சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கிருஷ்ணனுக்கு, பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தனம்,திருமஞ்சணம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள்,ஆராதனைகள் நடந்தது.
தொடர்ந்து கிருஷ்ணன்,ஸ்ரீதேவி, பூதேவி சாமிகள் சயன கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கிருஷ்ணனுக்கு பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு துளசி,வெண்ணை, பொங்கல் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.மேலும், கிருஷ்ணன் கோதை வேஷம் விட்டு குழந்தைகள் கிருஷ்ணன் பாட்டுக்கு நடனம் ஆடினர்.இதில், நத்தம் கோவில்பட்டி, வேலம்பட்டி, உலுப்பகுடி, குட்டூர்,வத்திப்பட்டி,சிறுகுடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணர் அவதார வரலாறு:மதுரா நகரில் தேவகி - வாசுதேவருக்கு எட்டாவது மகனாக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்தார். கிருஷ்ணர் பிறந்தது சிறைச்சாலையில். சிறைச்சாலையில் பிறந்த கிருஷ்ணர், கோகுலத்தில் வளர்ப்புத் தாய் யசோதையால் வளர்க்கப்பட்டான். தனது தாய் மாமன் கம்சனைக் கொன்று துவாரகையில் அரசாட்சி செய்தார்.
பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து, போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்தவரும் கண்ணன்தான். தேரோட்டியாக வந்த கண்ணன்தான் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார். தேரோட்டியாக வந்த கண்ணன், அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான் இந்து மக்களின் புனித நூலான பகவத் கீதையாக உள்ளது.தன் கடைசிக் காலத்தில் வேடன் ஒருவன் எய்த அம்பு காலில் தைக்க பூலோகத்தில் கண்ணன் அவதாரத்தை முடித்து மீண்டும் வைகுண்டம் சென்றார் என்று கூறப்படுவது உண்டு.
கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை “கண்ணா'' ''முகுந்தா'' என்று பல பெயர்களில் அழைக்கிறோம். கண்ணைப் போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து, முக்தி அளிப்பவன் என்றும் நம்புகிறோம்.
கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிகிறோம். வாசலில் தொடங்கி பூஜை அரை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிக்கிறோம். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu