நத்தத்தில் குழந்தைகள் தினவிழா விழிப்புணர்வு ஊர்வலம்

நத்தத்தில் குழந்தைகள் தினவிழா விழிப்புணர்வு ஊர்வலம்
X

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் குழந்தைகள் தின விழா.

ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை மற்றும் ஹெச்.ஐ. எல். கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தியது

கொசவபட்டியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கொசவபட்டியில் உள்ள ஆர்.சி துவக்கப்பள்ளியில் ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை மற்றும் ஹெச்.ஐ. எல். கல்வி அறக்கட்டளை இணைந்து குழந்தைகள் தின விழா முன்னிட்டு குழந்தைகள் பாதுகாத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு தலைமை ஆசிரியர் ஜூலியட் கேத்தரின் தலைமை வகித்தார். ஹெச். ஐ. எல். எஜுகேஷன் நிறுவனர் டாக்டர் மகேந்திர பிரபு முன்னிலை வகித்தார்.சமூக ஆர்வலர் டாக்டர் மருதைகலாம் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் முருகானந்தம், வழக்கறிஞர் அன்பழகன் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாத்தல் மற்றும் , டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மழைக் காலங்களில் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள். தொடர்ந்து பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தபட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், மூலிகைச் செடிகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai and business intelligence