நத்தம் அருகே கால்நடை மருத்துவ முகாம்..!

நத்தம் அருகே கால்நடை மருத்துவ முகாம்..!
X

நத்தம் அருகே, கால்நடை மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.

நத்தம் அருகே சேர்வீட்டில் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நத்தம்:

திண்டுக்கல் மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராம்நாத் உத்தரவின் பேரில் உதவி இயக்குனர் சரவணக்குமார் ஆலோசனையின்படி நத்தம் அருகே வேலம்பட்டி ஊராட்சி சேர்வீடு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இதில் நத்தம் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் சிங்கமுத்து தலைமையில், கோபால்பட்டி உதவி மருத்துவர் முருகானந்தம், ஆய்வாளர் மாரிமுத்து, உதவியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட குழுவினர் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி, சினைப் பரிசோதனை, கோமாரி நோய் தடுப்பூசி, மலட்டுத்தன்மை நீக்க சிறப்பு சிகிச்சை, குடற்புழு நீக்கம், நோய் மாதிரிகள் ஆய்வு, ஆண்மை நீக்கம் (காளை) செயற்கை முறை கருவூட்டல் பணி, கோழிக்கழிச்சல் தடுப்பூசி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

சிறந்த கிடேரிக் கன்றுகளுக்கான பரிசை அதை பராமரிக்கும் விவசாயிகளுக்கு ஊராட்சித் தலைவர் கண்ணன் வழங்கினார். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஆடு,மாடு, கோழி போன்ற கால்நடைகள் சுமார் 1000க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!