திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - நத்தத்தில் பரபரப்பு

திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - நத்தத்தில் பரபரப்பு
X

தீப்பிடித்து எரிந்த கார். 

நத்தத்தில் திடீரென்று கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது; தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. ஊறுகாய் ஏஜென்சி நடத்தி வருகிறார். அவருக்கு சொந்தமான காரை, மாரியம்மன் கோயில் முன்பாக நிறுத்தி வைத்துள்ளார். இன்று காலை, காரை ரவி ஸ்டார்ட் செய்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அதன் முன்பக்கம் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நத்தம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு துறையினர், உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர். நத்தம் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். திடீரென கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா