Badrakaliamman Temple Kumbabhisekam நத்தம் பத்ரகாளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் வழிபாடு
நத்தம் பத்ரகாளியம்மன் ஆலய ,மகா கும்பாபிஷேக விழாவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் சிவாச்சாரியார்கள்.
Badrakaliamman Temple Kumbabhisekam
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் காமராஜ் நகரிலுள்ள பத்ர காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தக்குடங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு . கடந்த 14ந் தேதி மாலை யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கி அன்றிரவு முதல் கால யாக பூஜை நடந்தது. மறுநாள் இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தது.
நேற்று காலை நான்காம் கால யாக பூஜையைத் தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித தீர்த்தக்குடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயிலை சுற்றி வந்து கோபுரத்தின் உச்சியை சென்றடைந்தது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங் முழங்க கோபுரத்தின் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது கோயிலை சுற்றி நின்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
பக்தர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அறுசுவை உணவு அன்னதானம் நடந்தது. இதில் சட்டமன்ற உறுப்பினர் நத்தம். விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், பேரூராட்சி சேர்மன் சேக்சிக்கந்தர் பாட்சா, பி.ஜே.பி. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் லெட்சுமணன், உட்பட நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நத்தம் காமராஜ்நகர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu