பழனியில் போகர் ஜயந்தி விழாவை அரசே நடத்த வேண்டும்: சிபிஎம் கட்சி வலியுறுத்தல்

பழனியில் போகர் ஜயந்தி விழாவை அரசே நடத்த வேண்டும்: சிபிஎம் கட்சி வலியுறுத்தல்
X

போகர்(பைல் படம்)

ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி ஜயந்தி விழா நடைபெறுவது வழக்கம். இதற்கு இந்து அறநிலையத்துறை தடை விதித்தது

பழனி முருகன் கோவிலில் உள்ள போகரின் ஜெயந்தி விழாவை இந்து சமய அறநிலையத்துறையே எடுத்து நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பதினெட்டு சித்தர்களுள் சிறப்பு வாய்ந்தவர் போகர் சித்தர் ஆவார். இவர் நவசித்தர்களுள் ஒருவரான காளங்கி நாதர் என்பவரின் சீடராவார். புகழ் பெற்ற புலிப்பாணி என்னும் சித்தருக்கு இவர் குருவாக விளங்கியவர். போகர் இயற்றிய நூல்களில் இருந்து அவரது காலம் கி.மு. 500 மற்றும் கி.மு. 100 க்கு இடைப்பட்ட காலம் என அறிய முடிகிறது. பிற வரலாற்றுப் பதிவுகளும் அவ்வாறே கூறுகின்றன.

இவர் சித்த மருத்துவத்திலும், யோகக் கலைகளிலும், இரசவாதம் செய்வதிலும், தத்துவ விஷயங்களிலும், சிறந்து விளங்கியவர். அது மட்டுமின்றி இவர் சிறந்த எழுத்தாளராகவும் இருந்தார் என்பது இவரின் சிறப்பு. காயகற்பம் மற்றும் யோகாசனத்தில் இவர் சிறந்து விளங்கியவர். இவர் தமிழிலும் சீன மொழியிலும் பல நூல்களை எழுதியுள்ளார் சித்தர்களின் மிக முக்கியமானவர் போகர் ஆவார்.

ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி ஜயந்தி விழா நடைபெறுவது வழக்கம். இதற்கு இந்து அறநிலையத்துறை தடை விதித்தது. ஆனால், மதுரை உயர்நீதிமன்றம் ஜயந்தி விழா நடத்த அனுமதி அளித்தது. இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள போகர் சந்நிதியை சிலர் உரிமை கோருவதை பயன்படுத்திக் கொண்டு சங் பரிவார் அமைப்புகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். ஆகவே, போகரின் ஜெயந்தி விழாவை இந்து சமய அறநிலையத் துறையே நடத்த வேண்டும் என்று அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!