திண்டுக்கல்லில் கூட்டுறவு நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

திண்டுக்கல்லில் கூட்டுறவு நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு  புத்தாக்க பயிற்சி
X

திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டுறவு நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி

உரிய நேரத்தில் நியாய விலை கடைகளை திறந்து பி ஓ எஸ் மிஷின்களை ஆன் செய்து வைத்திருக்க வேண்டும்

திண்டுக்கல்லில் கூட்டுறவு நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில், ஒருநாள் புத்தாக்க பயிற்சி வகுப்பினை, திண்டுக்கல் மண்டல இணைப்பதிவாளர் காந்திநாதன் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் இந்தப் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.பு த்தாக்க பயிற்சியில், நியாய விலை கடையில் பணி புரியும், அலுவலர்களுக்கு யோகா பயிற்சி மற்றும் நியாயவிலைக் கடைகளை சுத்தமாகவும் தூய்மையாகவும் எப்படி பராமரிக்க வேண்டும். விற்பனை முனையக் கருவி மூலம், தினசரி கண்காணிக்க வேண்டியது உரிய நேரத்தில் நியாய விலை கடைகளை திறந்து பி ஓ எஸ் மிஷின்களை ஆன் செய்து வைத்திருக்க வேண்டும்.

நியாய விலைக் கடைகளில் கட்டாயமாக வேலை நேரம் குறித்த பலகை அத்தியாவசிய பண்டங்கள் வழங்கல் அளவு குறித்த பலகை, பொருள் வாரியான பொருட்களின் விலை மற்றும் இருப்பு விபரம் நியாய விலைக் கடை குறித்தான புகார் அனுப்ப வேண்டிய அலுவலர்கள் அலுவலகம் விலாசம் மற்றும் தொலைபேசி எண்கள் கண்டிப்பாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்கள் இடம் பொறுமையாகவும் தன்மையாகும் நடந்து கொள்ள வேண்டும். உள்ளிட்ட அறிவுரைகள் புத்தாக்க பயிற்சியில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி சிறப்பு பயிற்சியாளர் சரவணன், கூட்டுறவு சங்க பதிவாளர் சிவசுப்பிரமணி, கூட்டுறவு சார்பதிவாளர் ரத்னா தேவி, மாவட்ட வழங்கல் அலுவலர் பழனிக்குமார் வாழ்த்துரை வழங்கினார். நியாய விலை கடை அலுவலர்கள் 100க்கும் மேற்பட்டோர் புத்தாக்க பயிற்சியில் கலந்து கொண்டனர்..

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்