திண்டுக்கல் மாவட்ட செய்திகள்: கொடைக்கானல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு,
பலத்த மழையால், கொடைக்கானல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு.
திண்டுக்கல்லைஅடுத்த சாணார்பட்டி அருகே நத்தமாடிப்பட்டியைச் சேர்ந்த கருப்புசாமி (28). என்பவர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அங்கு பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர்ஜோதி மணி(25). என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். யாரும் எதிர்பாராத நிலையில் கையில் வைத்திருந்த பெல்ட்டால் அவரை விளாசினார். இதில், டாக்டர் ஜோதி மணிக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அங்கிருந்த பணியாளர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, அங்கு வந்த நகர் வடக்கு காவல்நிலைய காவலர்கள் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சீலப்பாடி பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளதாகவும், தற்போது சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
திண்டுக்கல்லில் 350 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல், ரூ.12 ஆயிரம் அபராதம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாநகர் நல அலுவலர் பொறுப்பு செபாஸ்டின் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி சீனிவாசன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் திண்டுக்கல் மேற்கு ரத வீதி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர் .
அப்போது, 2 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்து அந்த கடைகளில் இருந்து 350 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து , 2 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ12,000 அபராதம் விதித்தனர்.
கொடைக்கானல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானலில் 3 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலைப்பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கனமழை காரணமாக, கொடைக்கானல், செண்பகனூர் பகுதியில் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல், பியர் சோழா அருவி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, தேவதை அருவி உள்பட பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu