திண்டுக்கல்லில், செயல்படாத கண்காணிப்பு காமிராக்கள்: தப்பிக்கும் திருடர்கள்

திண்டுக்கல்லில், செயல்படாத கண்காணிப்பு காமிராக்கள்: தப்பிக்கும் திருடர்கள்
X

திண்டுக்கல்லில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்க

திண்டுக்கல் நகரில் சில கண்காணிப்பு கேமராக்கள் தலைகீழாக தொங்கி கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

திண்டுக்கல்லில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்களால் திருடர்கள் சிக்காமல் தப்பிச்செல்லும் நிலை தொடர்கிறது.

திண்டுக்கல் நகரில் சில கண்காணிப்பு கேமராக்கள் தலைகீழாக தொங்கி கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. தி்ண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே, நாகல்நகர் மேம்பாலம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கேமராக்கள் கழன்று தொங்கி கொண்டிருக்கின்றன.திண்டுக்கல் பஸ் நிலையத்தில் 40-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

ஒவ்வொரு கேமராவும் இருந்த இடத்தில் வரிசை எண் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், ஒருசில இடங்களில் வரிசை எண் மட்டுமே இருக்கிறது. கேமராவை காணவில்லை. இதுதவிர சில இடங்களில் கேமராக்கள் இருந்தும் செயல்படவில்லை. இதனால், திருடர்கள் மிகவும் உற்சாகமாக பஸ் நிலையம் உள்பட பல இடங்களில் வலம் வருகின்றனர். திண்டுக்கல் பஸ் நிலைய பகுதியில் செல்போன் பறிப்பு, நகை பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. ஆனால், கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.

ஆகவே, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காமிராக்கள் இல்லாத இடத்தில் காமிராக்களை பொருத்த உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!