திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தடுப்பு ஊசி போடும் இடங்களை தேடி அலையும் மக்கள்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தடுப்பு ஊசி போடும் இடங்களை தேடி அலையும் மக்கள்
X
அனைவருக்கும் தெரிந்து கொள்ள வசதியாக தடுப்பூசி போடும் இடம் குறித்து மாநகராட்சிஅலுவலகத்தில் அறிவிப்பு வைக்க கோரிக்கை

இன்று திண்டுக்கல் மாநகர 8வது வார்டு பகுதியில் உள்ள காந்திஜி நினைவு நடுநிலை பள்ளியில் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அப் பகுதி மக்களுக்கு (45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு) கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிக கலந்து கொண்டனர்.

மேலும் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து நுகர்வேர் அமைப்பு கூறுகையில்,

மாநகராட்சி தடுப்பூசி போடும் இடம் குறித்து அலுவலகத்திலாவது காட்சி படுத்த வேண்டும். அப்போது தான் அனைவருக்கும் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். மக்களும் தடுப்பூசி போடும் இடங்களை தேடி அலைவ தேவையிருக்காது என தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!