திண்டுக்கல் குப்பை கிடங்கில் ஆணையாளர் ஆய்வு
திண்டுக்கல்லில் உள்ள குப்பை கிடங்கு ஆய்வு செய்தார், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன்.
திண்டுக்கல் முருகபவனம் குப்பைக் கிடங்கில் ஆணையர் ஆய்வு
திண்டுக்கல் மாநகராட்சியின் புதிய ஆணையராக ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.பதவி ஏற்ற முதல் நாளிலேயே, தனது பணியை தொடங்கிய ஆணையர், திண்டுக்கல் நகர மக்களின் முக்கிய பிரச்னையாக உள்ள முருகபவனம் குப்பை கிடங்கை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, குப்பைகளை தரம் பிரிக்கும் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
திருமண மண்டபங்களில் நகை திருட்டில் ஈடுபட்ட தந்தை மகன் கைது
திண்டுக்கல் நகர் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில், திருமண நேரங்களில் நகை திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன.
இது குறித்து, வடக்கு காவல் நிலையம் மற்றும் மேற்கு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில், சார்பு ஆய்வாளர் மனோகரன் நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் கள் வீரபாண்டியன், ஜார்ஜ் மற்றும் காவலர்கள் ராதாகிருஷ்ணன், முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர், சிசிடிவி காவலர்கள் ஜான் மற்றும் செல்வி உதவியுடன் சிசிடிவி பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பாலமுருகன் இவரது மகன் 16 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 16 பவுன் தங்க நகை, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுமலையில் வி.ஏ.ஒ. அலுவலகத்தில், பழங்குடியின மக்களுக்கு ஆதார் முகாம்:
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை, பழையூர், தாளக்கடை, வேளாண்பண்ணை, பொன்னுருவி, அகஸ்தியர் புரம், தொழுக்காடு ஆகிய பகுதிகளில் பளியர் சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு, இதுவரை தாங்கள் மனு அளித்தும் எந்தவித சான்றிதழ் கிடைக்காத நபர்களுக்கு சிறுமலை வி.ஏ.ஒ. அலுவலகத்தில் வி.ஏ.ஒ. சிவபிரதாப் தலைமையில், ஆதார் , குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ் மற்ற சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யும் பணி நடை பெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu