/* */

திண்டுக்கல் மேற்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டுமான பணிக்கு பூமி பூஜை

திண்டுக்கல் மேற்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டுமான பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

HIGHLIGHTS

திண்டுக்கல் மேற்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டுமான பணிக்கு பூமி பூஜை
X

திண்டுக்கல் மேற்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டுமான பணிக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டது.

நாட்ட

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் (மேற்கு) வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.3.85 கோடி மதிப்பீட்டில் புதிய வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், திண்டுக்கல் (மேற்கு) வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.3.85 கோடி மதிப்பீட்டில் புதிய வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுமான பணிகளை, அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்ததாவது:-

அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கவும், அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையிலும், மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அரசு அலுவலகங்கள் விரிவாக்கப்பட்டு, கட்டடங்கள் விரிவான வசதிகளுடன் கட்டப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் ரூ.3.85 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் தரை தளம் 590 ச.மீட்டர், முதல் தளம் 590 ச.மீட்டர் என மொத்தம் 1,180 ச.மீட்டர் பரளப்பளவில் அமைக்கப்படவுள்ளது. தரை தளத்தில் வட்டாட்சியர் அறை, அலுவலகம், பதிவுகள் வைப்பறை, கணினி அறை, விசாரணை அறை, ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்தனி கழிவறை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கென சாய்வு தளம் ஆகிய வசதிகளும், முதல் தளத்தில் வட்டாட்சியர் அறை, பதிவுகள் வைப்பறை, எழுதுபொருள் வைப்பறை, கூட்ட அரங்கு, ஆண், பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கென தனித்தனி கழிவறை வசதிகள் அமைக்கப்படவுள்ளன. இந்த பணிகளை 11 மாதங்களில் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர்(பொறுப்பு) சிவக்குமார், செயற்பொறியாளர் தங்கவேல், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், வருவாய் வட்டாட்சியர்(பொறுப்பு) மீனாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Jan 2024 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...