திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி, பணம் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி, பணம் பறிமுதல்
X

பைல் படம்

தாலுகா ஆபிஸ் ரோடு பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேரை கைது செய்தனர்

திண்டுக்கல்லில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.1,21,000 மதிப்புள்ள 1100 லாட்டரி சீட்டுகள், ரூ.2 லட்சம் பணம், 2 செல்போன்கள் பறிமுதல் செய்து இரண்டுபேரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் நகர் பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு, கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர் கார்த்திக் மற்றும் காவலர்கள் தாலுகா ஆபிஸ் ரோடு பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மதன் என்ற குழந்தைராஜ்(35), குணசேகரன்(38) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,21,000 மதிப்புள்ள 1,100 லாட்டரி சீட்டுகள், ரூ.2 லட்சம் பணம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்கிறார்கள்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது