திண்டுக்கல்லில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர அருகே, பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே பெரியமல்லணம்பட்டியில் உள்ள நர்சிங் கல்லூரியில், பொதுமக்களுக்கு மாவட்ட அளவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை, மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு தலைவர், மாவட்ட முதன்மை நீதிபதி.ஜமுனா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார், மாவட்ட ஆட்சியர் விசாகன், மாவட்ட எஸ்பி.ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு, இணையதள குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் பொதுமக்களுக்கு நடைமுறையில் உள்ள சட்டங்கள் குறித்தும், நலத்திட்ட பயன்பாடுகள் குறித்தும், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பற்றியும், மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையின் சார்பாக இணையதள குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், பெண்களுக்கு ஏற்படும் குற்றங்கள் குறித்து தகவல் தெரிவிக்க 181 மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும். குற்றங்கள் குறித்து தகவல் தெரிவிக்க 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பதாகைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பதாகைகளை வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேற்படி நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், காவல் துறையினர் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu