திண்டுக்கல்: அகரம் முத்தாலம்மன் திருவிழா விமரிசையாக நடைபெற்றது

Agaram Muthalamman Temple-திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அகரம் முத்தாலம்மன் திருவிழா முக்கிய நிகழ்வான குழு மண்டபத்திலிருந்து அம்மன் ஊர்வலமாக பூஞ்சோலையை சென்றடைந்தல் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே உள்ள பிரசித்தி பெற்ற அகர முத்தாலம்மன் கோவில் திருவிழா பதினெட்டாம் தேதி கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று (19 .10. 2021) அகரம் முத்தாலம்மன் அதிகாலை ஆறு மணி அளவில் கோவில் நிர்வாக முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 18 பட்டி கிராம மக்களும் அதிக அளவில் கோவிலுக்கு வருவது வழக்கம். தமிழக அரசினுடைய கொரோனா தொற்றுநோய் விழிபுணர்வுக்கு சட்ட திட்டங்களை ஏற்று கோயில் நிர்வாகத்தினர் திருவிழாவை நடத்தினர்.கோவில் கொலு மண்டபத்தில் அமர்ந்திருந்த முத்தாலம்மன் சொருக்கு பட்டையத்தில் பவனி மேற்கொண்டார். அம்மன் வரும் வழியில் ஆற்றில் தண்ணீர் செல்வதால் அம்மன் ஆற்றுக்குள் இறங்கி பக்தர்களுக்கு சிறப்பான காட்சியளித்தார்.ஆற்றைக்கடந்து அம்மன் திருக்கோவிலில் சாலை வழியாக சாலையோரம் கூடியிருந்த பக்தர்களுக்கு காட்சி அளித்தபடி பூஞ்சோலை சென்றடைந்தார். இவ்விழாவில் கோயில் நிர்வாகிகள் பதினெட்டுபட்டி முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu