செஸ் போட்டியில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

செஸ் போட்டியில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
X

 சின்னாளபட்டி நடந்த செஸ் போட்டியில் வென்ற வித்யாபார்த்தி பள்ளி மாணவ மாணவிகள்.

சின்னாளபட்டி நடந்த செஸ் போட்டியில் வென்ற வித்யாபார்த்தி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் நடைபெற்ற பிசரீஸ் செஸ் அகாடமி சார்பாக மாவட்ட அளவிலான ராஜன் நினைவு செஸ் போட்டி நடந்தது. இதில் திண்டுக்கல் வித்யா பார்த்தி மேல்நிலைப்பள்ளி மற்றும் வித்யா பார்த்தி சிபிஎஸ்சி பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். 9 ,11, 13 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் மூன்று மற்றும் நான்காம் பரிசு பெற்று சாதனை படைத்தனர்.

பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த பள்ளி மாணவ, மாணவிகளை, பள்ளித் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளி முதல்வர் கார்த்திகை குமார், ஒருங்கிணைப்பாளர் கல்யாணி, உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில் கார்த்திகேயன், மருதுபாண்டி, சீனிவாசன், மணிகண்டன், செல்வராணி உட்பட பலர்பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்