தீக்கிரையான கார்: அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர்பிழைப்பு

தீக்கிரையான கார்: அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர்பிழைப்பு
X

தீ பற்றி எரியும் கார்.

திண்டுக்கல் தேனி தேசிய நெடுஞ்சாலையில் கார் தலைகுப்புற கவிழ்ந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

திண்டுக்கல் தேனி தேசிய நெடுஞ்சாலையில், மாருதி 800 வாகனம் ஆத்தூர் ஒன்றியம் சுதனாகிய புறம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த பாலத்தில் இடித்து பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து. இந்த விபத்தில் கார் தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக செம்பட்டி காவல்துறையினர் மற்றும் ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் செம்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரில் சிக்கியிருந்த நான்கு பேரை சிறு காயங்களுடன் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான காரின் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக செம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai as the future