விவசாயம் சார்ந்த தொழிற்சாலை - அதிமுக வேட்பாளர் உறுதி

விவசாயம் சார்ந்த தொழிற்சாலை - அதிமுக வேட்பாளர் உறுதி
X

விவசாயம் சார்ந்த தொழிற்சாலை தொடங்கப்படும் என ஆத்தூர் தொகுதி வேட்பாளர் திலகபாமா கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றிய பகுதிகளான கோனூர், மாங்கரை, கசவனம்பட்டி, கரிசல்பட்டி, தருமத்துப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்:- விவசாயத்தை லாபம் தரும் தொழிலாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படும். மாதந்தோறும் ரேசன்கார்டு உள்ள இல்லத்தரசிகளுக்கு ரூ.1500, வருடத்திற்கு 6 சிலிண்டர், அம்மா வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு, இலவச கேபிள் டிவி இணைப்பு உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளைக் கூறி பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். இதில் அதிமுக ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!