வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி தேர்தலுக்கு எதிர்ப்பு

வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி தேர்தலுக்கு எதிர்ப்பு
X

குடகனாறு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கூறி அனுமந்தராயன் கோட்டை பொதுமக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர். மற்றும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அருகில் அமைந்துள்ளது அனுமந்தராயன் கோட்டை. மேற்கு தொடர்ச்சி மலையில் மழை காலங்களில் பெய்யும் மழை நீரானது கன்னிமார் கோவில் அருகே இருந்து குடகனாறு ஆக மாறி ஆத்தூர், காமராஜர் நீர்த்தேக்கம் வழியாக மல்லையாபுரம் வீரக்கல் அனுமந்தராயன் கோட்டை மயிலாப்பூர், திண்டுக்கல், தாடிக்கொம்பு, வேடசந்தூர் உட்பட 300க்கும் மேற்பட்ட கிராமங்களின் வாழ்வாதாரமாக சுமார் 108 கிலோ மீட்டர் வரை குடகனாறு சென்று காவிரியில் கலக்கிறது.

குடகனாறு ஆற்றுப் படுகை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் குடகனாறு அணையை மட்டுமே நம்பியுள்ளனர். குடகனாறு தண்ணீரை மட்டும் நம்பி சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பல்வேறு விவசாய பொருட்களை விவசாயம் செய்து வந்தனர். இப்பகுதியில் அதிக அளவில் பூக்கள் நெல், வாழை, தென்னை என விவசாயம் செய்து வந்த விவசாயிகள் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கன்னிமார் ஓடை அருகே தடுப்பு அணை கட்டியதால் தண்ணீரானது குடகனாறு பகுதிக்கு வரவில்லை.இதனால் ஆத்தூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை செய்து வந்தனர்.

ஆனால் தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டதால் தற்போது வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாகவும், நிரந்தரமாக குடகனாறு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் மேலும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கூறியதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குடகனாறு ஆற்றுப்படுகை விவசாயிகளின் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கூறி வீடு மற்றும் சாலைகளிலும் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரும் அதிக அளவில் இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil