தொழிலதிபர் தற்கொலை

தொழிலதிபர் தற்கொலை
X
திண்டுக்கல் தனியார் திருமண மண்டப கழிப்பறையில் தொழிலதிபர் தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தாத்தாக்காப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அவருக்கு பிரியா என்ற மனைவியும், கவின், சுதர்சன் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டமானதால் கடனாளியானர். அந்தக் கடனை அடைக்க தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நடுப்பட்டியில் அவருக்கு சொந்தமான நிலத்தை மனைகளாக பிரித்து விற்க அடிக்கடி திண்டுக்கல்லுக்கு வருவதுண்டு.

அதேபோல் நேற்று சேலத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு தனது மோட்டார் பைக்கில் வந்துள்ளார். இன்று காலை பேருந்து நிலையம் அருகே எல் ஜி பி காம்பவுண்ட் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியிடம் கழிப்பறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் கழிவறைக்கு சென்ற அவர் திரும்பி வராததால் மண்டபத்திலிருந்து நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. அங்கு சென்ற போலீசார் கழிப்பறை கதவை உடைத்து பார்த்த போது பாண்டியராஜன் தற்கொலை செய்துகொண்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இறந்தவரின் உடலை கைப்பற்றி ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இச் சம்பவம் குறித்து நகர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் திருமண மண்டபத்தில் உள்ள கழிவறையில் தன் கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai marketing future