பப்ஜி மதன் தருமபுரியில் கைது : தனிப்படை போலீஸ் அதிரடி

பப்ஜி மதன் தருமபுரியில் கைது : தனிப்படை போலீஸ் அதிரடி
X

பப்ஜி மதன் 

பப்ஜி மதன் தருமபுரியில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி அருகே குண்டல்பட்டி என்ற இடத்தில் தனியார் தங்கும் விடுதியில் பதுங்கியிருந்த பப்ஜி மதனை சுற்றி வளைத்து கைது செய்தது சென்னை தனிப்படை போலீஸ்.

தடைசெய்யபட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி யூடிப்பில் பதிவிட்டு பல கோடிகளை சம்பாதித்து. அதில் பெண்கள், குழந்தைகளை ஆபாசமாக பேசி பதிவிட்டார் என்பது பப்ஜி மதன் மீது புகார் உள்ளது. இதனை தொடர்ந்து தலைமறைவான மதனை கைது செய்ய, சென்னை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

தருமபுரி அருகே குண்டல்பட்டி என்ற இடத்திலுள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருந்த மதனை சென்னை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இவருடன் இவரின் நண்பரான பெரம்பலூரை சேர்ந்த பார்த்தீபன் என்பவரையும் தனிப்படை போலீசாரின் பிடித்துசென்றுள்ளனர்.

தருமபுரி அருகே உள்ள குண்டல்பட்டியில்( கனிஷ் ஹோம் ஸ்டே) என்ற தனியார் லாட்ஜில் தான் பப்ஜி மதன் தங்கியிருந்துள்ளார் என்பதை சென்னையைச் சேர்ந்த தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். ‌ ஆன் லைன் புக்கிங் மூலம், மதனின் நண்பரான பெரம்பலூரை சேர்ந்த பார்த்தீபனின் பெயரில் 17 ம்தேதி ( நேற்று) அறை பதிவு செய்யபட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யபட்டுள்ள மதனிடம் தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!