தருமபுரியில் சம்பங்கி பூ விளைச்சல் அதிகரிப்பு.!

தருமபுரியில் சம்பங்கி பூ விளைச்சல் அதிகரிப்பு.!
X

சம்பங்கி தோட்டம்

தருமபுரி மாவட்டத்தில் சம்பங்கி பூ விளைச்சல் அதிகரித்து, சந்தைக்கு வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 2000 ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் சம்பங்கி பூ சாகுபடி செய்துள்ளனர்.

சம்பங்கி பூவினால் விவசாயிகளுக்கு லாபம் அதிகரித்து வருகிறது. பூச்சி நோய் தாக்காமல் வருடம் முழுவதும் வருமானம் ஈட்டும் பயிராக சம்பங்கி பூ உள்ளதால் மாதத்திற்கு குறைந்தது 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பங்கி பூவில் வருமானம் ஈட்டி வருகின்றனர். இதனால் விவசாயிகள் இதனை பயிர் செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விளைச்சல் அதிகரிப்பால் தருமபுரி மார்க்கெட் மட்டுமின்றி பெங்களுருவுக்கும் பூக்களை அனுப்பி செய்து வருகின்றனர். முகூர்த்த நாட்களில் ஒரு கிலோ ரூ.100 முதல் 200 வரை விற்பனை செய்யப்படும் பூ, மற்ற நாட்களில் சராசரியாக ரூ.50 முதல் 70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!