தருமபுரி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு நாளை எழுத்துத் தேர்வு

தருமபுரி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு நாளை எழுத்துத் தேர்வு
X
Dharmapuri News Today - தருமபுரி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை (4ம் தேதி) நடைபெறுகிறது.

Dharmapuri News Today - தருமபுரி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு நாளை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 22 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பங்கள் கூராய்வு செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் வருகின்ற 04.12.2022 அன்று எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.

இத்தேர்வனாது தருமபுரி வட்டம், நகராட்சி பூங்கா அருகில் உள்ள செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மையத்திலும், நல்லம்பள்ளி வட்டம், ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மையத்திலும், பாலக்கோடு வட்டம், ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மையத்திலும், பென்னாகரம் வட்டம், நல்லானூர் ஜெயம் பொறியியல் கல்லூரி மையத்திலும், காரிமங்கலம் வட்டம், நாகனம்பட்டி அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய மையங்களிலும் நடைபெறவுள்ளது.

இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண்/ மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பினை கொண்டு அனுமதி சீட்டினை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கிராம உதவியாளர் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியான https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174 என்ற இணைய பக்கதிற்கு சென்றும் பதிவு எண்ணினையும், கைபேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதிச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்ட வேலைவாய்ப்பகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பதிவஞ்சலில் தேர்வு அனுமதிச்சீட்டு அனுப்பிவைக்கப்படும். மேலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட தேர்வர்கள் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து விண்ணப்பத்தாரர்களும் தேர்வு நாளன்று கீழ்காணும் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். இதில் விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 09.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் எவரும் தேர்வு அறைக்குள் காலை 09.50-க்கு பின் அனுமதிக்கப்படமாட்டார்கள் மற்றும் காலை 10.50-க்கு முன் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் கருப்பு பால்பாயின்ட் பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும். அனுமதிச்சீட்டு மற்றும் கருப்பு பால்பாயின்ட் பேனாவை தவிர தேர்வறைக்குள் வேறு எந்த பொருளையும் தேர்வறைக்குள் கொண்டு வரக்கூடாது. விண்ணப்பதாரர்கள் அலைபேசி, புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டுவரக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story