90 மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற பெண் -வைரலாகும் வீடியோ

90 மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற பெண் -வைரலாகும் வீடியோ
X

கிரிஜா சத்துணவு அமைப்பாளர் 

என்னால முடியல ரொம்ப கொடும படுத்துறாங்க 90 மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற பெண்.. வைரலாகும் வீடியோ

என் பெயர் கிரிஜா சத்துணவு அமைப்பாளராக பணி செய்கிறேன் என்னை ரொம்ப கொடும படுத்துறாங்க, சின்ன பசங்க முன்னாடிலாம் அசிங்க படுத்துறாங்க ரொம்ப அவமானமா இருக்கு, என்னால முடியல, என் கொழந்தய பாத்துக்குங்க கலக்ட்டரம்மா ரொம் அவமான படுத்துறாங்க எங்கம்மா கிட்டயே கொழந்தய குடுத்திருந்து அவுங்க தான்.வளத்தாங்க என கூறிக்கொண்டே மன அழுத்தத்தில் கண்ணீர் விட்டு அழுதபடியே.பெண் ஒருவர் அளவுக்கதிமான மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயலும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களி்ல் வைரலாக வருகிறது.

வீடியோவில் உள்ள பெண் குறித்து விசாரித்த போது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேவுள்ள சொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், இவரது கணவர் பெயர் கலைத்தென்றல் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார், இவர்களுக்கு 11 மாத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது சொன்னம்பட்டி அரசுப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார், பள்ளியின் தலமை ஆசிரியை ( சாந்தி) முட்டை ஏன் குறைவாக இருக்கிது என கேட்டிருக்கிறார், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் கிரிஜா 90 மாத்திரைகளை விழுங்கியதாக கூறப்படுகிறது, பள்ளியின் தலமை ஆசிரியை சத்துணவில் உள்ள குறைபாடுகளை அவ்வப்போது கேட்டு, கண்டித்து வந்ததாகவும், அதனால் கிரிஜா மன உளைச்சலில் இருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்

தூக்கி மாத்திரை விழுங்கியதை தொடர்ந்து பாலக்கோடு அரசு மருத்துவமனையில் முதலில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக காரிமங்கலம் காவல்துறையும், சமூக நலத்துறை, மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business