தர்மபுரி காவலர் பயிற்சிப்பள்ளியில் 225 பேருக்கு வரவேற்பு

தர்மபுரி காவலர் பயிற்சிப்பள்ளியில் 225 பேருக்கு வரவேற்பு
X

தர்மபுரி காவலர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி காவலர்களை வரவேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன்.

தர்மபுரி காவலர் பயிற்சிப்பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் பயிற்சி காவலர்களை வரவேற்று அறிவுரை வழங்கினார்.


தருமபுரி மாவட்டம், வெண்ணாம்பட்டியிலுள்ள தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் 225 பேருக்கு அறிமுகப் பயிற்சிக்காக சேர்ந்தனர்.

அவர்களுக்கு இன்று முதல் பயிற்சி துவங்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆயுதப்படை மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் பயிற்சி காவலர்களை வரவேற்று அறிவுரை வழங்கினார். இதில் அவர்களுக்கு வழங்கக்கூடிய அடிப்படை பயிற்சி குறித்தும் பயிற்சி காலத்தில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளை குறித்தும் பேசினார்.

இந்நிகழ்வில் உடன் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலை, சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஸ்பராஜா, காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!