ஈச்சம்பாடி அணைக்கட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு
தர்மபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர்.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், ஈச்சம்பாடி அணைக்கட்டின் இடது மற்றும் வலது புற கால்வாயிகளில் பாசனத்திற்காக 6250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் இன்று முதல் 120 நாட்கள் அல்லது ஆற்றில் தண்ணீர் வரத்து இருக்கும் வரை தண்ணீர் திறந்து விட ஆணையிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடது புற வாய்கால்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஈச்சம்பாடி அணைக்கட்டில் தற்போது உள்ள நீரின் அளவு, நீர்வரத்தை கருத்தில் கொண்டு வினாடிக்கு 70 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
ஈச்சம்பாடி அணைக்கட்டின் இடதுபுற கால்வாய் மூலமாக 3250 ஏக்கர் நிலங்களும், வலதுபுற கால்வாய் மூலமாக 3000 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 6250 ஏக்கர் புன்செய் நிலங்கள் பயனடைகின்றன. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள காரிமங்கலம், அரூர் மற்றும் ஊத்தங்கரை வட்டங்களில் உள்ள 32 கிராமங்கள் பயனடைகின்றன.
ஈச்சம்பாடி அணைக்கட்டில் தற்போது உள்ள நீரின் அளவைக் கொண்டு நீர் மேலாண்மை மேற்கொண்டு விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் யசோதா, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் பிரபு, ஈச்சம்பாடி ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி, விவசாய பெருமக்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu