ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
X

ஒகேனக்கல் அருவி - கோப்புப்படம் 

நீர்வரத்தால் ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.

தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிற நிலையில், தமிழக காவிரி கரையோர எல்லை பகுதிகளான, அஞ்செட்டி, ஒகேனக்கல், நாட்றம்பாளையம் ஆகிய வனப்பகுதிகளில் கன மழை பெய்தது.

இதனால் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக வரும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

ஒகேனக்கல்லுக்கு நேற்று வரை வினாடிக்கு 2000 கனஅடியாக இருந்த நீர்வரத்தானது கனமழை காரணமாக படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை நேரத்தில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

இந்த நீர்வரத்தானது மேலும் படிப்படியாக அதிகரித்து இன்று காலை வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து வருகிறது.

இந்த நீர்வரத்தால் ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன. மேலும் தற்போது 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள இந்த நீர்வரத்து, சுற்று வட்டார பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்தே அதிகரிக்கவோ குறையவோ வாய்ப்பு உள்ளது என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்