ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
X

பைல் படம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 7000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காவிரி கரையோரங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்றைய நிலவரப்படி 9500 கன அதிகரித்தது தொடர்ந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி, 8,500 கன அடியாக நீர்வரத்து குறைந்தது.

தற்போதைய நிலவரப்படி மீண்டும் பத்தாயிரம் கன அடியாக நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகிய இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

நேற்று காலை மேட்டூர் அணைக்கு 2,500 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 9,345 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது. அண்மையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்த நிலையில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 31.31 அடியில் இருந்த நிலையில் தற்போது 33.10 அடியாக உள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு 8.81 டிஎம்சியாக உள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்