தாட்கோ அசல் தொகையை செலுத்தினால் வட்டி, அபராத வட்டி தள்ளுபடி: ஆட்சியர் தகவல்

தாட்கோ அசல் தொகையை செலுத்தினால் வட்டி, அபராத வட்டி தள்ளுபடி: ஆட்சியர் தகவல்
X

தர்மபுரி ஆட்சியர் சாந்தி 

தாட்கோ மூலம் கடன் பெற்ற பயனாளிகள் அசலை முறையாக செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று தர்மபுரி ஆட்சியர் அறிவித்துள்ளார்

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனைத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி (ம) வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின் கீழ் 1990-91 முதல் 2011-12 ஆண்டு வரை கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி (ம) வளர்ச்சிக் கழகம் ஆகிய திட்டங்களில் பெற்ற கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தில் கீழ் அசல் தொகையினை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ, மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் 31.12.2023 வரை செயல்படுத்தப்படும் எனவும் தாட்கோ, மாவட்ட மேலாளர்கள் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளபடி அசல் தொகையினை பயனாளிடமிருந்து வசூல் செய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், ர்ருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா