தர்மபுரியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்
தர்மபுரியில் விநாயகர் சதுர்த்தி
இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தர்மபுரியில் பிரசித்தி பெற்ற எஸ்.வி. சாலையில் உள்ள சாலைவிநாயகர் கோவில், நெசவாளர் காலனியில் உள்ள விநாயகர்-முருகன் கோவில், கடைவீதி அருகே உள்ள ராஜகணபதி கோவில், டிரசரி காலனியில் உள்ள பிரகதம்பாள் கோவில் ஆகிய கோவில்களில் கணபதி ஹோமம் செய்து, விநாயகர் சிலைகளுக்கு பால், நெய், இளநீர், தேன் மற்றும் வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
விநயாகருக்கு தேங்காய், பழ வகைகள், விளாங்காய், சுண்டல், அவல் பொரி, கொழுக்கட்டை, பொங்கல் உள்ளிட்டவைகளை படைத்து சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. பின்னர் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் காவல்துறை அனுமதித்துள்ள 1300 இடங்களில் ராஜகணபதி, சக்தி கணபதி, சிவ கணபதி, நந்தி கணபதி, லட்சுமி கணபதி, சரஸ்வதி கணபதி, யானை வாகன கணபதி, துர்முக கணபதி, துர்கா கணபதி உள்ளிட்ட பல வடிவங்களில் 10 அடி முதல் 11 அடி வரை விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மக்கள், தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்தனர். மேலும் பூஜைப்பொருட்களையும், விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் உணவு வகைகளை படைத்து நைவேத்தியம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu