புரட்டாசி சனிக்கிழமை: உழவர் சந்தையில் ரூ.18 லட்சத்திற்கு விற்பனையான காய்கறிகள்

புரட்டாசி சனிக்கிழமை:  உழவர் சந்தையில்  ரூ.18 லட்சத்திற்கு விற்பனையான  காய்கறிகள்
X
தர்மபுரி உழவர் சந்தையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி வழக்கத்தைவிட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்

தர்மபுரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக உழவுத் தொழில் இருந்து வருகிறது. விவசாயிகள் காய்கறிகளை வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு காய்கறி வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் நுகர்வோர் இடத்தில் நேரடியாக அதிக வருவாயீட்டும் வகையில் தர்மபுரி மாவட்ட வேளாண் துறை மூலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகராட்சி, பேரூராட்சிகளில் உழவர் சந்தை விற்பனை மையத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அனைத்து உழவர் சந்தைகளுக்கும் உழவர்களால் நேரடி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நுகர்வோர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வகை காய்கறிகளையும் நேரடியாக சென்று வாங்கி பயன்பெற்று வருகின்றனர்.

இன்று தர்மபுரி மாவட்டத்தில் புரட்டாசி மாத சனிக்கிழமை நாட்களில் இந்துக்கள் விரதம் இருந்து தங்களது வீடுகளில் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு காணிக்கையாக உண்டியல் வைத்து பூஜை செய்வது வழக்கம். இந்த பூஜையை புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை முழுவதும் விசேஷமாக கொண்டாடி வருகின்றனர்.

இதனையொட்டி தர்மபுரி உழவர் சந்தையில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

மேலும் இன்று சந்தையில் தக்காளி ரூ.10 , கத்தரிக்காய் ரூ.20 , வெண்டைக்காய் ரூ.6, முள்ளங்கி ரூ.20, முருங்கைக்காய் ரூ.45, தேங்காய் ரூ.30 ,சின்ன வெங்காயம் ரூ.38, கேரட் ரூ.40 என அனைத்து காய்கறிகளும் மிகக் குறைந்த விலையில் விற்பனை ஆனதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

இன்று உழவர் சந்தைக்கு 30 ஆயிரத்து 600 கிலோ காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதனை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் ரூ.18 லட்சம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகளை வாங்கி சென்றனர் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!