தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தை அரசு துணைச்செயலாளர் ஆய்வு

தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தை அரசு துணைச்செயலாளர் ஆய்வு
X

வள்ளல் அதியமான் கோட்டம் மற்றும் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் ஆகியவற்றை அரசு துணைச்செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வள்ளல் அதியமான் கோட்டம் மற்றும் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் ஆகியவற்றை அரசு துணைச்செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தருமபுரி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டம் மற்றும் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் ஆகியவற்றை இயக்குநர் செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு துணைச்செயலாளர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் உடனிருந்தார்.

இதனை தொடர்ந்து, பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி. ஒன்னப்ப கவுண்டன் அள்ளி ஊராட்சியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் இயக்குநர் செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு துணைச்செயலாளர் முனைவர். வீ.ப.ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டு இம்மணிமண்டபத்தில் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் மார்பளவு சிலை அமைப்பதற்கும், இம்மணிமண்டப வளாகத்தில் பூங்கா அமைத்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் உரிய முன்மொழிவுகளை தனித்தனியாக தயாரித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஒப்புதல் பெற்று இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு அனுப்பி வைத்திட வேண்டுமென உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு மு. அண்ணாதுரை, பொதுப்பணித்துறை (கட்டடம் மற்றும் பராமரிப்பு ) உதவிப்பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!