தர்மபுரி மாவட்டத்தில் நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்றிதழ்

தர்மபுரி மாவட்டத்தில் நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்றிதழ்
X

தர்மபுரி ஆட்சியர் சாந்தி 

தர்மபுரி மாவட்டத்தில் நரிக்குறவர் இனத்தவர்களை பழங்குடியினர் வகுப்பிற்கு மாற்றப்பட்டு பழங்குடியின சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன

தர்மபுரி மாவட்டத்தில் 164 நரிக்குறவர் இன மக்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிலிருந்து பழங்குடியினர் வகுப்பிற்கு மாற்றப்பட்டு பழங்குடியின சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசால் நரிக்குறவர், குருவிக்காரன் சமுதாயத்தினர் அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை பெற தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து பழங்குடியினர் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ள நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்றிதழை அரசால் வெளியிடப்பட்ட நெறி முறைகளை பின்பற்றி வழங்கப்பட்டு வருகிறது.

தர்மபுரி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 8 நரிக்குறவர் இனமக்களுக்கும், அரூர் வட்டத்திற்குட்பட்ட பச்சினாம்பட்டி கிராமத்தில் 115 நரிக்குறவர் இனமக்களுக்கும், பெரிய பன்னி மடுவு கிராமத்தில் 38 நரிக்குறவர் இனமக்களுக்கும், மாம்பட்டி கிராமத்தில் 2 நரிக்குறவர் இனமக்களுக்கும், மத்தியம்பட்டி கிராமத்தில் 1 நரிக்குறவர் இனத்தை சார்த்தவருக்கும் என மொத்தம் 164 நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியின சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரசால் மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து தற்பொழுது பழங்குடியினர் பிரிவில் நரிக்குறவர்களுக்கு சாதிச்சான்று வழங்குவதால் ஏராளமான சலுகைகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நரிக்குறவர் இன மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயின்று போட்டித்தேர்வுகளில் பங்கேற்று, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2 உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளில் தங்களுக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எளிதாக அரசுப்பணியில் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தர்மபுரி, அரூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து மண்டல துணை வட்டாட்சியர்களும் தங்களது வட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நபர்கள் ஏற்கனவே குருவிக்காரன், நரிக்குறவன் சாதிச்சான்று அட்டையாக பெறப்பட்டிருப்பின் அதை ரத்து செய்து இ-சாதிச்சான்று வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசால் வழங்கப்பட்டுள்ள இந்நலத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil