தர்மபுரியில் 23ம் தேதி டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு

தர்மபுரியில் 23ம் தேதி டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு
X

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி.

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் 23ம் தேதி டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் 23ம் தேதி டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

தற்போது தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC Fold Surveyor cum assistant straughtsman 2022 தேர்விற்கான 1089 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்பு 23.09.2022 அன்று தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://cutt ly/GCVWxWm என்ற Gossle படிவத்தில் விண்ணப்பிக்கவும், மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 04342 296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

TNPSC Field Surveyor cum assistant draughtsman 2022 போட்டித் தேர்விற்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!