/* */

தருமபுரி மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள்

தருமபுரி மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

தருமபுரி மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள்
X

பைல் படம்.

தருமபுரி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், மானிய விலையில் பாரம்பரிய நெல்விதைகளை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்று பயன்பெறலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் தருமபுரி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகள் 2 மெட்ரிக் டன் 50 சதவீத மானியத்தில் வழங்க அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களின் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் கடந்த சட்டப்பேரவை வேளாண்மை பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி, கருப்புக்கவுணி மற்றும் சீரக சம்பா ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள் 2 மெட்ரிக் டன் விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் விநியோகிப்பதற்காக அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

அரசு விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.25/-க்கு நிர்ணயம் செய்யப்பட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பாரம்பரிய நெல்விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளன. மொத்த விலையில் 80 சதவீதம் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 20 சதவீதம் பட்டியலின மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும். விவசாயி ஒருவருக்கு அதிகபட்சமாக ஏக்கர் ஒன்றுக்கு 10 கிலோ விதை மட்டுமே வழங்கப்படும். இதில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும், தருமபுரி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், மானிய விலையில் பாரம்பரிய நெல்விதைகளை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 15 Sep 2022 2:21 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...