அரூர் அருகே சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த மகன்

அரூர் அருகே சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த மகன்
X
பைல் படம்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே சொத்து தகராறில் தந்தையை அடித்து கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம்அரூர் அருகே மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் வயது 70. விவசாயி அவரது மகன் முருகேசன் வயது 44.நீண்ட நாளாக சொத்து பிரிப்பதில் தகராறு இருந்து வந்தது.

இன்றுகாலை முருகேசன் தனது தந்தை கோபாலிடம் சொத்தை பிரித்து தரும்படி கேட்டுள்ளார் அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இது முருகேசன் தனது தந்தையின் பின்பக்க தலைமீது இரும்பு ராடால் அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தந்தை கோபால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரூர் போலீசார் கோபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக உள்ள மகன் முருகேசனை தேடி வருகின்றனர்

Tags

Next Story