கோவில் நிலத்தை அளவீடு செய்யும் பணி: அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு
நில அளவீடு செய்யும் பணியை ஆய்வு செய்ய வந்திருந்த அமைச்சர் சேகர் பாபு
தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, நல்லம்பள்ளி அருகேவுள்ள கோபாலம் பட்டியில் கோவில் நிலத்தை அளவீடும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து அதியமான் கோட்டையிலுள்ள பிரசித்தி பெற்ற கால பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், அங்கிருந்து புறப்பட்டு தர்மபுரி நகரில் பிரசித்திப்பெற்ற பழமையான கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் சாமி கோவிலுக்கு வந்தார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஜி.பி.எஸ் கருவி மூலம் நில அளவை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 1.50 ஏக்கர் நிலம் சர்வே செய்து முடிக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்ந்து, நில அளவையாளர்கள் கொண்டும், ஜி.பி.எஸ் கருவி உதவியின் மூலமும், அளவீடு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்திலும் நில அளவீடு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதியமான் கோட்டையிலுள்ள காலபைரவர் கோவில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று காலபைரவர் கோவிலில் திருமண மண்டபம் ஒன்று கட்டப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பணிகளை விரைவாக எடுத்துக் கொள்ளவும், பக்தர்களின் வசதிக்காக கழிவறை வசதி, குடிநீர் வசதி செய்து தருவதற்கும், அஷ்டமி காலங்களிலும் பூஜைக்கு அதிகமாக பக்தர்கள் வந்து செல்வதால், அவர்கள் விளக்கேற்றி சாம்பல் பூசணி வைத்து வழிபாடு செய்ய வசதியாக கோவிலுக்கு அருகேவுள்ள தனியார் நிலத்தை கோவி லுக்கு பெறுவதற்கான முயற்சிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொண்டு வருகின்றோம்.
கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் சாமி கோவில் திருப்பணிகள் விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் விரைவில் நடைபெறும். இதே போல பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வரும் கோவில் தேரினை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணியும் நடந்து வருகிறது. என்று கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu