தர்மபுரி மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

தர்மபுரி மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டத்தில் 14 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்யது ஆட்சியர் சாந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 14 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியராக பணியாற்றிய ஆறுமுகம், பென்னாகரம் வட்டாட்சியராகவும், காரிமங்கலம் வட்டாட்சியராக பணியாற்றிய ரமேஷ், அரூர் வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் நிலம் எடுப்பு பிரிவில் தனி வட்டாட்சியராக பணியாற்றிய, பார்வதி நல்லம்பள்ளி வட்டாட்சியராகவும்,

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையில் தனி வட்டாட்சியராக இருந்த ரஜினி, காரிமங்கலம் வட்டாட்சியராகவும்,

மொரப்பூர்-தர்மபுரி ரயில் திட்ட நில எடுப்பு பிரிவு தனி வட்டாட்சியராக இருந்த கலைச்செல்வி, பாலக்கோடு வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அரூர் வட்டாட்சியராக இருந்த பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலகத்தில் நில எடுப்பு பிரிவு வட்டாட்சியராகவும்,

பென்னாகரம் வட்டாட்சியராக இருந்த சவுக்கத் அலி, தர்மபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், நில எடுப்பு பிரிவு வட்டாட்சியராகவும்,

பாலக்கோடு வட்டாட்சியராக பணியாற்றிய ராஜா, நெடுஞ்சாலை துறை நில எடுப்பு பிரிவு வட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நில எடுப்பு பிரிவு தனி வட்டாட்சியராக பணியாற்றிய சரவணன், மொரப்பூர்-தர்மபுரி ரயில் திட்ட நில எடுப்பு பிரிவு வட்டாட்சியராகவும்,

நல்லம்பள்ளி தனி வட்டாட்சியராக இருந்த லட்சுமி ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் ஆகவும்,

பென்னாகரம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக ராதாகிருஷ்ணன், அரசு கேபிள் டிவி வட்டாட்சியராக சுகுமார், நல்லம்பள்ளி சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக அருண் பிரசாத் என 14 வட்டாட்சியர்களை பணி இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!