மானிய விலையில் சோலார் பம்ப் செட், வேளாண் இயந்திரங்கள்
தருமபுரி ஆட்சியர் சாந்தி
Solar Agriculture Pump -தருமபுரியில் மானிய விலையில் சோலார் பம்ப் செட்டுகள் மற்றும் வேளாண் இயந்திரங்களை வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலமாக வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்க திட்டத்தின்கீழ் விவசாய உற்பத்தியை பெருக்கி வருமானத்தை உயர்த்திடும் நோக்கில், வேளாண் இயந்திரங்களான டிராக்டர், மினிடிராக்டர், பவர்டில்லர், களை எடுக்கும் இயந்திரம், ரோட்டாவேட்டர், நெல் அறுவடை இயந்திரம் போன்ற கருவிகள். இதர விவசாயிகளுக்கு அடிப்படைவிலையில் 40% அல்லது அரசு நிர்ணயித்த மானியம் இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும். சிறு குறு பெண், கந்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின் விவசாயிகளுக்கு அடிப்படை விலையில் 50% அல்லது அரசு நிர்ணயித்த மானியம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும். அரசு நிர்ணயித்த மானியத்தில் பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது.
விவசாயிகள், வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தில், ஒரு நிதி ஆண்டிங்: தனக்கு தேவைப்படும் ஏதாவது இரண்டு வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை மட்டுமே விவசாயிகள் வாங்க முடியும். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பின்னர்தான் அதே வகையான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை வாங்க முடியும்.
மேலும் சூரிய சக்தியால் இயங்கும் சோலார் பம்ப் 70% மானியத்திலும், சூரிய உலர்த்தி மற்றும் மதிப்புக் கூட்டும் வேளாண் இயந்திரங்கள் 40% பின்னே மானியத்திலும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக வழங்கப்பட உள்ளது. இதில் இந்து/ ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த மானியத்தினைக் காட்டிலும் கூடுதலாக 20% பின்னேற்பு மானியமும் மேற்கண்ட திட்டங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
தருமபுரி மாவட்டத்திற்கு 2022-23 ஆம் நிதியாண்டிற்கு மேற்காணும் திட்டங்களில் மானியம் வழங்கப்பட உள்ளது. மேற்காணும் திட்டங்களில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் தங்களது அடிப்படை விபரங்களான சிட்டா, அடங்கல், நிலவரைபடம், வங்கி கணக்கு, ஆதார், மற்றும் சிறு விவசாயி சான்று , ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் சான்று (தேவைப்படுபவர்கள் மட்டும்) தேவைப்படும் இயந்திரம் / திட்டம் விபரங்களுடன் செயற்பொறியாளர் (வே.பொ) வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி, 04342296948, 2. உதவி செயற்பொறியாளர் (வே.பொ) வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி 04342 296132, 3உதவி செயற்பொறியாளர் (வே.பொ) வேளாண்மை பொறியியல் துறை, ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், திருப்பத்தூர் மெயின் ரோடு, அருர், தருமபுரி மாவட்டம், 04346296077 அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu