தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைக்க கடும் கட்டுப்பாடு
காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி சிலை வைப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம்
தமிழகம் முழுவதும் வருகின்ற 18.9.2023 அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவிருக்கிறது. இப்பண்டிகையையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
சிலை வைத்து வழிபாடு செய்வது மற்றும் கரைப்பது தொடர்பான நிபந்தனைகள்
- சிலைகள் அமைக்க அந்தந்த பகுதி சார் ஆட்சியர் அல்லது கோட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளித்து அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.
- நிறுவப்படும் சிலைகள் 10 அடிக்கு மேல் உயரம் கொண்டதாக இருக்கக் கூடாது.
- கடந்த ஆண்டில் வைக்கப்பட்ட இடங்கனை தவிர புதிய இடங்களில் சிலைகளை வைக்க அனுமதி கிடையாது.
- மேலும், மின்சார வாரியத்தில், மின் இணைப்பு எங்கிருந்து பெறப்படுகிறது என்பதற்கான சான்றும் இணைக்கப்பட வேண்டும்.
- நிறுவ இருக்கின்ற விநாயகர் சிலையானது சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும்.
- சிலைகள் நிறுவ அமைக்கப்படும் கொட்டகை எளிதில் தீப்பிடிக்காத பொருட்களைக் கொண்டு நுழைவிடம் மற்றும் வெளியேறும் இடம் ஆகியவை தனித்தனியாக வைத்து போதுமான இடவசதியுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்விக் கூடங்களுக்கு அருகாமையிலும், மக்களின் எதிர்ப்புகள் உள்ள இடங்களிலும் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தக் கூடாது.
- காலையில் 2 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் மட்டுமே ஒலிபெருக்கியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்நிலையில் பாலக்கோடு தனியார் திருமண மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி சிலை வைப்பது தொடர்பான கலந்தாய்வுகூட்டம் பாலக்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிந்து தலைமையில் நடைபெற்றது.
இதில் பாலக்கோடு, காரி மங்கலம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விநாயகர் சிலை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய காவல்துறை துணை கண்காணிப்பாளர்.சிந்து வருகின்ற 18-ம் தேதி நடைபெற இருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைக்க 33 நிபந்தனைகள் குறித்து எடுத்துரைத்தார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் சிலை அமைப்பாளர்கள், பொதுமக்கள், காவல் ஆய்வாளர்கள் சுரேஷ், சுப்ரமணி, மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu