தர்மபுரி தொழிற் பயிற்சி நிலையத்தில் நடப்பாண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

தர்மபுரி தொழிற் பயிற்சி நிலையத்தில் நடப்பாண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை
X

தர்மபுரி அரசு தொழிற்பயிற்சி நிலையம் 

தொழிற் பிரிவுகளில் மீதமுள்ள காலியிடங்களை நிரப்பிட நேரடி சேர்க்கை 31.7.2023 வரை நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்ட அறிக்கையில், தர்மபுரி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இவ்வாண்டு ஆகஸ்ட் 2023-ம் ஆண்டு சேர்க்கைக்கு முதல் கட்ட சேர்க்கை நடைபெற்றதில் தொழிற் பிரிவுகளில் மீதமுள்ள காலியிடங்களை நிரப்பிட நேரடி சேர்க்கை 31.7.2023 வரை நடைபெறவுள்ளது.

இதில் 14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 உச்சவரம்பு இல்லை.

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுள்ள பிரிவில் கம்பியாள் (2 வருடம்) பற்ற வைப்பவர் (1 வருடம்) இருக்க வேண்டும்.

கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டண்ட் (கோபா) (1 வருடம்), கட்டடபட வரைவாளர் (2வருடம்), மின்பணியாளர் (2 வருடம்), பொருத்துநர் (2 வருடம்) கம்மியர் மோட்டார் வண்டி (2 வருடம்), கம்மியர் டீசல் (1 வருடம்) மற்றும் இயந்திர வேலையாள் (2 வருடம்) ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் சேர்க்கையில் கலந்துகொள்ளலாம்.

2021ல் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 9ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின்படி பதிவேற்றம் செய்யலாம். சேர்க்கைக்கு வரும்போது தங்கள் அசல் கல்விச்சான்றிதழ்கள், சேர்க்கை மற்றும் விண்ணப்ப கட்டணங்களுடன் நேரில் வருகை தரவேண்டும்.

ஆதார் அட்டை, அலைபேசி எண்கள், மார்பளவு புகைப்படம்.-1, இ.மெயில் ஐடி மற்றும் விண்ணப்ப கட்டணம் ரூ.50- மட்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம்.

பயிற்சி காலத்தின்போது பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையாக வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாடபுத்தகம், விலையில்லா வரைபட கருவிகள், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா சீருடை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பேருந்து பயண அட்டை, விலையில்லா மூடுகாலணி முதலிய சலுகைகள் வழங்கப்படும்.

ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. மேலும் இந்நிலையத்தில் பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் கல்வி உதவித்தொகையாக ரூ.1000- மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

எனவே தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து தொழிற்பிரிவு கிடைக்கப்பெறாதவர்கள் இந்த வாய்ப்பினை தவற விடாமல் விண்ணப்பித்து பயனடையலாம் .

விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்ய தர்மபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு - 9445803042, 9361745995, 9894930508 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்

Tags

Next Story
ai in future agriculture