தர்மபுரியில் சிறுதானிய விழிப்புணர்வு விழா

தர்மபுரியில் சிறுதானிய விழிப்புணர்வு விழா
X

சிறுதானிய அரங்குகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் 

தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறுதானிய விழிப்புணர்வு விழாவில் அரங்குகளை பார்வையிட்ட ஆட்சியர் துண்டு பிரசுரங்களை வழங்கினார்

2023- 2024 ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து சிறுதானிய விழிப்புணர்வு மற்றும் சர்வதேச சிறுதானிய திருவிழாவை மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், 2023-2024ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொது மக்களாகிய நுகர்வோர்களிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சிறுதானிய திருவிழா தர்மபுரி மாவட் டத்தில் கொண்டாடப்படுகிறது.

மேலும் சிறுதானியங்கள் முக்கியதுவம் குறித்து கண்காட்சி அரங்குகள் அமைத்து, அனைத்து வகையான பாராம்பரிய சிறுதானிய சிறப்புகள் தொடர்பான விழிப்புணர்வு தகவல்கள் வழங்கி பல்வகை சிறுதானிய உணவுகளை தயார் செய்து அச்சிறுதானியத்தின் நன்மைகள் குறித்து குறிப்புக ளுடன் நுகர்வோராகிய பொதுமக்களின் பார்வைக்கு வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களை கொண்டு விநியோகம் செய்து நேரடி விளக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நம் முன்னோர்களால் ஆதிகாலத்திலிருந்தே உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவில் முதல் இடத்தைப் பிடிப்பவை சிறுதானிய வகைக ளான குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் போன்றவைதான். எனவேஇந்தியாவின் பாரம்பரியமிக்க சிறுதானிய வகைகளை உலக மக்களிடையே பிரபலப்படுத்தும் விதமாக 193 ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் இந்தத் தீர்மா னத்தை ஒரு மனதாக ஆதரித்ததால் 2023-ஆம் ஆண்டை சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக ஐ.நா. அறிவித்திருக்கிறது.

உடலுக்கு நல்லது என்று பல உணவு வகைக ளைப் பயன்படுத்தும் நாம்சிறுதானிய உணவுகளை உண்பதைக் காலப் போக்கில் மறந்துவிட் டோம். ஆரோக்கி யத்தைப் பேணுவதற்குத் தேவையான அனைத்து சத்துக்க ளும் சிறுதானியங்களில் உள்ளது. சிறுதானியங்க ளில் நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதால் நாம் உண்ணும்போது நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.

சிறுதானியங்களில் சத்துக்களுடன் பல மருத்துவ குணம் கொண்ட நுண்ணுயிர் எதிர்ப்பு வேதிப்பொருட்களும் ஆக்சிஜனேற்ற எதிர்ப் பொருட்களும் உள்ளன. சிறுதானியங்களில் உள்ள கிளை சிமிக் இன்டெக்ஸ் சர்க்க ரை நோயாளிகளுக்குச்சிறந்தது என்று கூறினார்

இந்நிகழ்ச்சி யில் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பி ரின்ஸ்லி ராஜ்குமார், தமிழ் நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் தேன்மொழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இராமதாஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்தடங்கம் சுப்பரமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா