தர்மபுரியில் மாவட்ட வாழ்விட மேம்பாட்டு குழுவின் இரண்டாவது கூட்டம்
தர்மபுரியில் மாவட்ட வாழ்விட மேம்பாட்டு குழுவின் இரண்டாவது கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வாழ்விட மேம்பாட்டு குழுவின் இரண்டாவது கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற நகர்ப்புர ஏழை குடும்பங்களுக்கு, நகர்ப்புர ஏழைகளுக்கு சிறந்த வாழ்க்கை நிலை, அடிப்படை வசதிகள் மற்றும் சாதகமான சூழலை உருவாக்கவும், தருமபுரி மாவட்ட நகர்ப்புரங்களின் திட்ட உருவாக்கத்தில் ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தவும், அரசு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தவும், அடிப்படை வசதிகள் மற்றும் நிலையான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தவும்,
இதர அரசு துறைகளுடன் இணைந்து பொருளாதாரத்தில் நலிவுற்ற நகர்ப்புர ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்டங்களை சென்றடையவும், நகர்ப்புர ஏழைகள் மற்றும் சுகாதாரமற்ற பகுதிகளில் வாழும் குடும்பங்களை மறுகுடியமர்வு செய்யும் நோக்கத்திற்காக வீட்டு வசதி நகர்ப்புர வளர்ச்சி துறையின் சார்பில் மாவட்ட வாழ்விட மேம்பாட்டு குழு 08.05.2022 அன்று மாவட்ட ஆட்சியரால் உருவாக்கப்பட்டது.
அதன்படி முதலாவது குழு கூட்டம் கடந்த 07.06.2022 அன்று நடத்தப்பட்டது. தற்போது மாவட்ட வாழ்விட மேம்பாட்டு குழுவின் இரண்டாவது குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு பயனாளிகள் பட்டியல் ஒப்புதல் பெறுவது, குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதி செய்து தருவது, குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு பெறுவது மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அட்டை முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம் நடத்துதல் போன்றவைகள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் விஜயமோகன் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu