ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாயிகளுக்கு மின் மோட்டார் வாங்க ரூ.10,000 மானியம்
பைல் படம்.
தருமபுரி மாவட்டம், தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார், பிவிசி பைப் வாங்க மானியம் வழங்கப்படுகின்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு பிவிசி பைப் வாங்க ரூ.15,000/- மானியமாகவும் மற்றும் புதிய மின் மோட்டார் வாங்க ரூ.10,000/- மானியமாகவும் வழங்கப்படுகிறது.
விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 இலட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும். தாட்கோ மானிய திட்டத்தில் பயன்பெறாத எஸ்.சி.எஸ்.டி விவசாயிகளுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும் மற்றும் துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
ஏற்கனவே தாட்கோ நிலம் வாங்கும் திட்டம், நிலமேம்பாடு திட்டம் மற்றும் துரித மின் இணைப்பு திட்டம் ஆகிய திட்டங்களில் பயன்பெற்றிருந்தாலும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். விண்ணப்பதாரர் தங்களது சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ரேசன் கார்டு, இருப்பிடச் சான்று, சிட்டா, பட்டா. அடங்கல், அ-பதிவேடு, புலப்பட வரைபடம், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி ஆகியவற்றை ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்தவர்கள் எனில் விண்ண ப்பங்களை தாட்கோ இணையதள முகவரியான http/application.tahdco.com மேற்கண்ட சான்றுகளை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் எனில் தாட்கோ இணையதள முகவரியான http/fast.tahdco.com சான்றுகளை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்.3 சாலை விநாயகர் கோயில் ரோடு, விருப்பாட்சிபுரம் தருமபுரி அவர்களை அணுகுமாறும் அல்லது தொலை பேசி எண்.04342-260007 தொடர்பு கொண்டு பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu