தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு

தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு
X

மருத்துவக் கல்லூரி கட்டடட பணிகளை ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் 

தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார்

தர்மபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டிடம் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மையக்கட்டடம் கட்டப்பட்டு வரும் பணிகளை பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்திரமோகன், மாவட்ட ஆட்சியர் சாந்திமுன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் 20.1.2022 அன்று காணொலி காட்சியின் வாயிலாக ஆற்றிய உரையில் தர்மபுரியில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் கட்டப்படும் என அறிவித்தார். அதன்படி ரூ.36.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது.

இதற்கு சுமார் 4.25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தரைதளத்துடன் கூடிய 5 தளம் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடத்தின் பரப்பளவு 1.21 இலட்சம் சதுர அடி ஆகும். தரைதளத்துடன் கூடிய 5 தளத்தில் மாவட்ட ஆட்சியர் அரங்கம், மாவட்ட வருவாய் அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பயிற்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட நகர் ஊரகமைப்பு அலுவலர், தமிழ் வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர், மாவட்ட சமுக நல அலுவலர், இந்து சமய அறநிலைய அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் அறை மற்றும் மற்ற பிற துறைக்களுக்கும் அறைகள் ஒதுக்கப்பட உள்ளது.

இப்புதிய கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் வசதி, மின்தூக்கி வசதி மற்றும் நீரின் அவசியம் கருதி மழைநீர் சேமிப்பு வசதியும் ஏற்ப்படுத்தப்பட உள்ளது.

தற்போது முதல் தளம் கூரை பணிகள் முடிக்கப்பட்டு இரண்டாம் தளத்தின் கான்கிரீட் தூண்கள் போடப்பட்டு இரண்டாம் தளத்தினுடைய கூரை சென்ட்ரிங் பணிகள் மற்றும் கம்பி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இப்பணிகளை பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார்கள்.

மேலும், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை மையக் கட்டிடம் ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது.

தரைத்தளம் மற்றும் ஆறு தளங்களுடன் மொத்த பரப்பளவு 46,502 சதுர அடியில் இந்த கட்டடம் கட்டப்பட உள்ளது. இதனை பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு. இப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.

இந்திகழ்ச்சியின் பொது பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் கோயம்புத்தூர் மண்டலம் காசிலிங்கம், கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. அமுதவல்லி, செயற்பொறியாளர் சிவக்குமார் உட்பட பல்வேறு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!