புரட்டாசி அமாவாசை: ஒகேனக்கலில் தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்

புரட்டாசி அமாவாசை: ஒகேனக்கலில் தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்
X

மஹாளய அமாவாசை தர்ப்பணம் செய்ய ஒகேனக்கலில் குவிந்த மக்கள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மகளாய அமாவாசையொட்டி தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் குவிந்தனர்.

புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையையொட்டி காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.

இதைத்தொடர்ந்து புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையொட்டி இன்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

காவிரி ஆற்றில் கரை யோரம் முன்னோர்களின் நினைவாக புனித நீராடி தர்ப்பணம் செய்வதால் அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு பொதுமக்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

இன்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகம், ஆந்திரம், புதுவை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் ஒகேனக்கலில் குவிந்தனர்.

இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு சுமார் 14,000 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருந்தது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் பயணத்திற்கு மட்டும் இன்று 3-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. மெயின் அருவி, சினி அருவி, பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும், அருவிகளில் குளிக்கும் சுற்றுலா பயணி களின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊர் காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபடுட்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா