தர்மபுரியில் வரும் 5ம் தேதி கால்நடைத்துறை வாகனம் பொது ஏலம்
X
பைல் படம்.
By - C.Elumalai, Sub -Editor |25 March 2022 10:19 AM IST
தர்மபுரியில் வரும் 5ம் தேதி கால்நடைத்துறை வாகனம் பொது ஏலம் விடப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் கட்டுப்பாட்டிலுள்ள தருமபுரி உதவி இயக்குநர், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு வாகன எண்.TN 29 G 0480 Boloro LX(D) என்ற வாகனம் கழிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கழிவு செய்யப்பட்ட இந்த வாகனத்தை 05.04.2022 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் இலக்கியம்பட்டி இராஜாஜி நீச்சல் குளம் எதிரில் உள்ள கால்நடை பெரு மருத்துவமனை வளாகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது.
இந்த பொது ஏலத்தில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி அவர்கள் தெரிவித்துள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu