தர்மபுரியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வு
தர்மபுரி மக்கள் தொடர்பு கள அலுவலகமும் நாட்டு நலப்பணி திட்டமும் (என்எஸ்எஸ்) இணைந்து சர்வதேச யோகா தினத்தின் முன்னோட்ட நிகழ்வான யோகோத்சவ், பெரியார் பல்கலைக்கழக முதுநிலை பட்ட வகுப்பு விரிவு மையத்தில் நேற்று நடைபெற்றது.
தர்மபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் டி சாந்தி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பெரியார் பல்கலைக்கழக முதுநிலை பட்ட வகுப்பு விரிவாக்க மையத்தின் இயக்குனர் டாக்டர் பி மோகனசுந்தரம் தலைமை வகித்தார். நேரு யுவகேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் ஜி வேல்முருகன், மன அறக்கட்டளையைச் சேர்ந்த பேராசிரியர் ஆர்.தண்டவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
யோகா பயிற்சிக்கு யோகா ஆசிரியையும், சமூக செயற்பாட்டாளருமான டி. ஜெயப்பிரியா தலைமை தாங்கினார். தர்மபுரி மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் கள விளம்பர உதவியாளர் எஸ் வீரமணி வரவேற்று பேசினார். நாட்டு நலப்பணி திட்டத்தின் திட்ட அலுவலர் டாக்டர் சி. கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
யோகா பயிற்சி நிகழ்வில் நாட்டு நலப்பணி திட்டத்தைச் சேர்ந்த 300 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியையொட்டி பெரியார் பல்கலைக்கழக முதுநிலை பட்ட வகுப்பு விரிவாக்க மையத்தில் இருந்து தர்மபுரி நான்கு சாலை சந்திப்பு வரை பேரணியும் நடைபெற்றது. பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu