தருமபுரியில் வரும் 24ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரியில் வரும் 24ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
X

பைல் படம்.

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 24ம் தேதி தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்பட உள்ளது.

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 24ம் தேதி தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்பட உள்ளது.

இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், மருத்துவம் சார்ந்த படிப்புகள் (செவிலிய உதவியாளர், மருந்தாளுநர்), தையற்பயிற்சி உட்பட்ட பல்வேறு திறன் பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.

தருமபுரி, நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, ஒசூர் மற்றும் சென்னையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. வேலையளிக்கும் நிறுவனங்களும் மற்றும் வேலைநாடுநர்களும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தவறாது பதிவு செய்யவும் மற்றும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04342-296 188 என்ற எண்ணுக்கு தெடர்பு கொள்ளலாம்.

ஆகவே, தருமபுரி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்களும் பொதுமக்களும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture